வேர்ன் எர்ச் ஹப்பல் நகரில் மாலை 6 மணிக்கு ஆரம்பமான முதலாவது லீக் ஆட்டத்தில் போட்டிகளை நடத்துகின்ற நாடுகளில் ஒன்றான ஒஸ்திரியாவும், போலந்தும் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்றன. போலந்து அணியின் வீரர் குரேரோ 30வது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றார். ஆனாலும் போட்டியில் இறுதித்தருணத்தில் ஒஸ்திரியாவுக்கு கிடைத்த தண்டனை உதை மூலம் வஸ்ரிக் ஒரு கோலைப் பெற்றார். இதன்படி போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்தப் போட்டியில் சமநிலை பெற்றதையடுத்து ஒஸ்திரியா முதல் சுற்றுடன் வெளியேறுகிறது.
வியன்னா நகரில் இரவு 8.15 மணிக்கு ஆரம்பித்த இரண்டாவது ஆட்டத்தில் பலம்பொருந்திய ஜேர்மனிய அணியும், அண்மைக்காலத்தில் அதிகளவில் சாதித்துள்ள குரேஷியா அணியும் மோதின. இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே குரேஷிய வீரர்கள் ஆட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். போட்டியின் 24வது நிமிடத்தில் குரேஷிய வீரர் ஸமா முதல் கோலையும், 62வது நிமிடத்தில் ஒலிக் இரண்டாவது கோலையும் போட்டு முன்னிலை வகித்தனர். எனினும் மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் ஜேர்மனி அணியின் நட்சத்திர வீரரான பொடல்ஸ்கி 79வது நிமிடத்தில் கோலோன்றைக் பெற்றார். இதன் மூலம் போட்டியில் 2-1 என்ற கணக்கில் குரேஷியா வெற்றி பெற்றது.
ஐரோப்பியப் பிராந்திய நாடுகளில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற போட்டிகளில் குரேஷியா கால்பந்தாட்ட அணி, ஜேர்மனிய அணியைத் தொடர்ந்து தோற்கடித்து வந்துள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குரேஷியா காலிறுதிக்கு தகுதிபெற்ற இரண்டாவது அணியென்ற பெருமையைப் பெற்றது. இதனிடையே நேற்றைய போட்டியில் சமநிலை பெற்றதையடுத்து, சுவிற்சர்லாந்துக்கு அடுத்து ஒஸ்திரியாவும் முதல் சுற்றுடன் வெளியேறுகின்ற அணியென்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது.
இன்றைய போட்டிகள்: ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளின் இன்றைய போட்டிகள் குழு ‘சீ’யில் அங்கம் வகிக்கின்ற அணிகளுக்கிடையில் சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ளன. சூரிச் நகரில் மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது ஆட்டத்தில் முதல்போட்டியில் தோல்வியடைந்த இத்தாலியும், ரோமானியாவும் மோதுகின்றன.
பேர்ன் நகரில் இரசு 8.15 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது போட்டியில் பலம்பொருந்திய அணிகளான நெதர்லாந்தும், பிரான்சும் மோதுகின்றன. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி காலிறுதிக்கு தகுதிபெறும். பிரான்ஸ் அணிக்கு போட்டியில் வெல்லக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


