| துருக்கி கால்பந்தாட்ட அணி ஒரு சிறப்பு பார்வை. |
|
|
| வெள்ளி, 13 ஜூன் 2008 08:26 |
2002ஆம் ஆண்டு இடம்பெற்ற பீபா கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் 3ஆம் இடத்தை பிடித்த துருக்கி கால்பந்தாட்ட அணி, ஐரோப்பியப் பிராந்தியத்தில் கால்பந்தாட்டத்தை துடிப்புடன் விளையாடுகின்ற நாடுகளில் முக்கியமானது. தற்போது நடைபெற்றுவரும் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் போர்த்துக்கல், செக் குடியரசு, சுவிற்சர்லாந்து ஆகிய அணிகள் அங்கம் வகிக்கும் குழு ஏ யில் துருக்கியும் அங்கம் வகிக்கின்றது.
உலகத் தரநிலையில் 20வது இடத்திலிருக்கின்ற துருக்கி கால்பந்தாட்ட அணி, ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதிகாண் சுற்றுப்போட்டிகளில் சிறந்த முறையில் விளையாடி தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது. குழு ஏயில் அங்கம் வகிக்கின்ற அணிகளில் போர்த்துக்கல்லுக்கு அடுத்த படியாக அதிக பலம் வாய்ந்த அணியாக துருக்கி கருதப்படுகின்றது. நீலம் வெள்ளை மற்றும் சிவப்பு வெள்ளை நிறத்திலான அங்கிகளை அணிந்து ஐரோப்பிய கிண்ண போட்டிகளில் ஆடவுள்ள துருக்கி அணியின் அணிதலைவராக முன்கள ஆட்டக்காரர் நிஹாட் ஹக்வீசி செயற்படுகின்றார். இவர் தலையில் தற்போதுள்ள அணியில் அனேக வீரர்கள் பதுமுக வீரர்களாவர். அவர்கள் அனைவரும் தமது திறமைகளை வியக்கும் வகையில் அண்மைக்காலத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். ரோமானியா கால்பந்தாட்ட அணிக்கு எதிராக, 1923ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேசப் போட்டியில் ஆடிய துருக்கி கால்பந்தாட்ட அணி, அந்தப் போட்டியில் 2-2 என்ற கணக்கில் சமநிலையைப் பெற்றது. 1949ஆம் ஆண்டு சிரியா அணிக்கு எதிராக 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதே துருக்கி அணியின் மிகப்பெரிய வெற்றியாகக் கொள்ளப்படுகின்றது.
துருக்கி அணியின் முன்கள வீரர்களான நிஹாட் ஹக்வீசி (அணித் தலைவர்), செமி சென்ருக், ஹாசீம் ஹாசீம் ஆகியோர் ஐரோப்பிய பிராந்தியப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருபவர்கள். துருக்கி அணிக்கான கடந்த 3 வருடங்களாக சிறப்பான பெறுபேற்றை பெற்றுக்கொடுத்தவர்கள். இவர்கள் ஊடறுப்பு ஆட்டத்தில் சிறந்தவர்கள். மத்திளகள ஆட்டக்காரர்களான சேவற் வெரிக், கோகான் ஷான், எமாரே குண்சோர், எமாரே ஆசிக் ஆகியோர் முன்கள வீரர்களாகவும், சப்ரி சறிக்லூ, ஹமிட் அல்ரிக்ரெப் ஆகியோர் தேவையேற்படும் போது பின்கள வீரர்களாக தாக்குதல் ஆட்டம் ஆடுவதிலும் சிறந்தவர்கள். இவர்கள் துருக்கி அணியின் இரும்புச் சுவர்கள் என வர்ணிக்கப்படுபவர்கள். துருக்கி அணியின் பின்கள வீரர்களாக முஹமட் ரெபல், முஹமட் ஆலூறி, கொக்டினிஸ் ஹரடினிஸ், ருமார் ருடின், ஆர்டா ருறான் ஆகியோர் சிறப்பாக செயற்படுகின்ற போதிலும், எதிரணியின் முன்கள வீரர்களின் தாக்குதல் ஆட்டத்தை தடுத்து நிறுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆணி விபரம்: கோல் காப்பாளர்கள்: ருஸ்று றெக்பர், ரொல்கா சென்கின், வொல்கொன் டெமிறல்.
பின்கள வீரர்கள்: ஹஹன் பல்ரா, எமாரே பெலசுக்லூ, முஹமட் ரெபல், முஹமட் ஆலூறி, கொக்டினிஸ் ஹரடினிஸ், ருமார் ருடின், ஆர்டா ருறான், உருர் பொரல், ரேன்கி சான்லி, ஆய்ஹான் அஹ்மான். முன்கள வீரர்கள்: நிஹாட் ஹக்வீசி (அணித் தலைவர்), செமி சென்ருக், ஹாசீம் ஹாசீம், மெல்வுர் பெர்டனிக். பயிற்சியாளர்: பேற்ரி டெறிம். ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளின் துடிப்பு மிக்க இளைஞர்களைக் கொண்டுள்ள துருக்கி கால்பந்தாட்ட அணி, அதிகபட்சம் காலிறுதி வரை செல்லக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். ஆனாலும், அனைத்து வீரர்களும் ஒருங்கிணைவுடன் விளையாடினால் அரையிறுதிவரை செல்லலாம். பார்க்கலாம் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் துருக்கி எவ்வாறு சாதிக்கின்றது என்று……குரேஷியா அணி தொடர்பான பார்வை நாளை….. |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








2002ஆம் ஆண்டு இடம்பெற்ற பீபா கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் 3ஆம் இடத்தை பிடித்த துருக்கி கால்பந்தாட்ட அணி, ஐரோப்பியப் பிராந்தியத்தில் கால்பந்தாட்டத்தை துடிப்புடன் விளையாடுகின்ற நாடுகளில் முக்கியமானது. தற்போது நடைபெற்றுவரும் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் போர்த்துக்கல், செக் குடியரசு, சுவிற்சர்லாந்து ஆகிய அணிகள் அங்கம் வகிக்கும் குழு ஏ யில் துருக்கியும் அங்கம் வகிக்கின்றது.
உலகக் கிண்ணப் போட்டிகள் இரண்டில் விளையாடியுள்ள துருக்கி அணி(1954, 2002), பலரையும் வியப்பில் ஆழ்த்தி 2002ஆம் ஆண்டு 3ஆம் இடத்தைப் பெற்றது. ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளில் மூன்று தடவைகள் பங்குபற்றியுள்ள துருக்கி, 2000 ஆண்டு காலிறுதி வரை முன்னேறியது. 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளிலேயே துருக்கிய முதன்முதலாக பங்கெடுத்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.