உலகத் தரநிலையில் 15வது இடத்திலுள்ள குரேஷியா கால்பந்தாட்ட அணி, 1998ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற பீபா உலகக் கிண்ணப் போட்டிகளில் 3ஆம் இடத்தைப் பிடித்ததே இந்த அணியின் முக்கிய வெற்றியாகும். மத்தியகள ஆட்டக்காரர் நிக்கோ கோவக்கை அணித்தலைவராகக் கொண்டுள்ள குரேஷிய அணியில் திறமையான பல வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
அமெரிக்காவிற்கு எதிராக 1990ஆம் ஆண்டு, தனது முதலாவது சர்வதேசப் போட்டியில் ஆடிய குரேஷியா அதில் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1998ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியொன்றில் 7-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றமையே குரேஷியாவின் மிகப்பெரிய தோற்கடிப்பாகும்.
உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் 3ல் விளையாடியுள்ள குரேஷியா, 1998ஆம் அண்டு 3வது இடத்தை பிடித்துள்ளது. ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகள் மூன்றில் விளையாடியுள்ள போதிலும், 2000 ஆண்டு காலிறுதிக்கு தகுதி பெற்றது. (இந்த ஆக்கம் எழுதப்பட்ட போது, தற்போது நடைபெற்று வரும் ஐரோப்பியக் கிண்ணக் போட்டிகளிலும் குரேஷியா காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது)
நீலம்,சிவப்பு மற்றும் சிவப்பு, வெள்ளை நிறத்திலான அங்கிகளுடன் விளையாடும் குரேஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் தொடர்ந்தும் வெற்றிகளைக் குவித்து வருகின்ற அணியென்ற பெருமையைப் பெற்றுள்ளது. ஜேர்மனியுடன் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய அம்சமாகும்.
குரேஷியா அணியில், முன்கள வீரர்களான நிக்கோலோ காலினிக், இவன் க்லாஸ்னிக், இவீக்கா ஒலிக், இகோ புடான், மலோடன் பற்றிக் ஆகியோர் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்றனர். கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை திறமையாகப் பயன்படுத்தி கோல்களைப் பெறுவதில் கில்லாடிகள். இவர்கள் எதிரணியினரால் மிகவும் கவனத்துடன் எதிர்கொள்ளப்படும் வீரர்கள்.
அணித்தலைவர் நிக்கோ கோவாக், இவான் ராகிரிக், ஒன்நெயன் வுகோஜெவிக், டாரயோ ஸ்னா ஆகியோர் மத்தியகள ஆட்டக்காரர்களாகச் செயற்படுகின்றனர். இவர்கள் பின்கள ஆட்டத்தை தேவையேற்படும் போது ஆடுவதுடன், முன்களத்தில் தாக்குதல் ஆட்டத்தினையும் வெளிப்படுத்துபவர்கள். இயை வீரர்களான ஜேர்கோ லோக்கோ, நிக்கோ க்றன்ஜ்கார் ஆகியோரும் திறமையாகச் செயற்படக் கூடியவர்கள்.
குரேஷியா அணியின் பின்கள வீரர்கள் ஜோசிப் சிமுனிக், ரொபேட் கொவாக், வெட்ரன் கோர்லுக்கா, க்வோஜே வெஜிக், நிககோலா போக்றிவாக் ஆகியோர் எதிரணிகளின் முன்கள வீரர்களினால் உடைக்க முடியாத இரும்புத் திரையாகக் கருதப்படுபவர்கள். இவர்களின் எல்லையைத் தாண்டி கோல்பெற்றுக்கொள்வதென்பது மிகவும் சிரமமான ஒன்று. அணி விபரம்:
கோல் காப்பாளர்கள்: ஸ்ரிப் பிலன்ரிகோசா, மாரியோ கலினோவிக், வெட்ரன் ருன்ஜே.
பின்கள வீரர்கள்: டாரியோ சிமிக், ஜோசிப் சிமுனிக், ரொபேட் கொவாக், வெட்ரன் கோர்லுக்கா, க்வோஜே வெஜிக், நிககோலா போக்றிவாக், டாரியோ நோசிவிக்.
மத்தியகள வீரர்கள்: இவான் ராகிரிக், ஒன்நெயன் வுகோஜெவிக், நிக்கோ கோவாக்(அணித் தலைவர்), டாரயோ ஸ்னா, ஜேர்கோ லோக்கோ, நிக்கோ க்றன்ஜ்கார், டானியல் பிறான்ஜிக்.
முன்கள வீரர்கள்: நிக்கோலோ காலினிக், இவன் க்லாஸ்னிக், இவீக்கா ஒலிக், இகோ புடான், மலோடன் பற்றிக்.
பயிற்சியாளர்: ஸ்லோவன் பாலிக்.
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளில் தொடர்ந்தும் தனது திறைமையை வெளிப்படுத்திவரும் குரேஷியா கால்பந்தாட்ட அணி, இந்த முறை அரையிறுதி ஆட்டம் வரை முன்னேறக் கூடிய வாய்ப்புக்கள் பிரகாசமாகவே உள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் குரேஷியா சாதிக்கின்றதா என்று. தொடர்ந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நெதர்லாந்து கால்பந்தாட்ட அணி தொடர்பிலான சிறப்பு பார்வை நாளை…. விளையாடு..விளையாடு….
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


