இதனை லண்டன் ரைம்ஸ் பத்திரிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

 


கடந்த புதன் கிழமை இலங்கைக்கு வருகை தந்த பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லி பான்டும், பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ளுமாறும் மோதல் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு இடமளிக்குமாறும் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ ஆகியோருடனான சந்திப்பின் பின்னர் தமது இலங்கை விஜயத்தின் நோக்கம் தோல்வி கண்டிருப்பதாக மில்லி பான்டும் குச்னரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

 

கோதாபய ராஜபக்ஷவுடன் அவர்கள் இருவரும் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் இலங்கையில் பத்திரிகை ஒன்றிலும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருந்தது.

 


மோதல் சூன்யப் பகுதியிலுள்ள பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கு ஐ.நா. செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்று குச்னர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்தப் பகுதிக்கு அவர் செல்வது பாதுகாப்பானதல்ல என்று பாதுகாப்புச் செயலாளர் பதிலளித்துள்ளார்.

 

அப்போது தான் அங்கு செல்ல விரும்புவதாக குச்னர் கூறியுள்ளார். அதற்குப் பதிலளித்த கோதாபய ராஜபக்ஷ, அவரும் (குச்னர்) கூட பணயக் கைதியாக வைக்கப்படுவார் என்று தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதற்குப் பதிலளித்த குச்னர் அந்த ஆபத்துக் குறித்து நான் கவனத்தில் கொள்ளவில்லை என்று பதிலளித்திருக்கிறார்.

 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பது அல்லது கொல்லுவது தொடர்பான இராணுவத்தின் முயற்சிகளின் விட்டுக்கொடுப்பை தான் விரும்பவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

விடுதலைப் புலிகள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என்பது பிரச்சினையல்ல. அந்த மாதிரியான விடயம் நடந்தால் திட்டமிட்டவாறு பிரபாகரனை பிடிக்க முடியாமல் போய்விடும் என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரபாகரனையும் அவருடைய உயர்மட்டத் தலைவர்களையும் சிக்கல்களிலிருந்து விடுவிக்கவே சிலர் மனிதாபிமான அக்கறைகளை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2 இலட்சம் பொதுமக்களை இராணுவம் மீட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் விபரித்த போது மில்லி பான்ட் குறுக்கீடு செய்ததாகவும் இராணுவத்தின் ஆட்லறித் தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் பிரிட்டனுக்கு கிடைத்திருப்பதாக மில்லி பான்ட் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலைப் புலிகளின் தவறான தகவல் பிரசாரத்தை பிரிட்டன் கவனத்தில் கொள்ளக் கூடாதென பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.

 

உண்மையை நிச்சயப்படுத்திக் கொள்ளாமல் பி.பி.சி. கூட புலிகளின் பிரசாரத்தை வெளியிடுவதாக மில்லி பான்ட்டிடம் பாதுகாப்புச் செயலர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

 


இதற்குப் பதிலளித்துள்ள மில்லி பான்ட் தனது கருத்து பி.பி.சி.யின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டதல்ல எனவும் களத்திலுள்ள வட்டாரங்களிலிருந்து கிடைத்த நம்பகரமான தகவல் என்றும் மில்லி பான்ட் தெரிவித்திருக்கிறார்.

 

பயங்கரவாதக் குழு கூறுவதையா அல்லது சட்டபூர்வமான அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி கூறுவதையா நம்புவது என்பதை தீர்மானிப்பது பிரிட்டிஷ் தூதுக் குழுவைப் பொறுத்தது என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு உங்களைப் பொறுத்தது' என்று அவரை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்