நேற்று சனிக்கிழமை இரவு 8.30மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பரமானந்தம்,கலைவேந்தன்,வேதநாயகம்,சத்தியபவன் என்ற நான்கு தமிழ் இளைஞர்களே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

 

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் நான்கு பேரும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என தெரிவித்த பொத்துவில் பொலிஸார் சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 

இவர்களிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதேவேளை அம்பாறை மவாட்டத்தின் கல்முனை பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 9.30மணியளவில் கைவிடப்பட்ட ஐஸ் வாடியில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

 

காரைதீவு விசேட அதிரடிப்படையின் புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

 

இதன்போது கைத்துப்பாக்கி-02,கைக்குண்டுகள்-02,ரி56 துப்பாக்கி ரவைகள்-60 அதற்குரிய மகசின்கள் -02 என்பன மீட்க்கப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் இன்று காலை தம்மிடம் விசேட அதிரடிப்படையினரால் கையளிக்கப்பட்டதாகவும் கல்முனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்