திம்புக்கோட்பாட்டுக்குப் பின்னர் இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து முதற்தடவையாகக் கோரிக்கையொன்றை விடுத்துள்ளன.

 

கடந்த மாத இறுதிப் பகுதியில் கூடிய அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடி இணக்கப்பாடொன்றுக்கு வந்ததுடன், அனைத்துக் கட்சிகளும் கைச்சாத்திட்ட கோரிக்கையடங்கிய கடிதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி., புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட அனைத்துத் தமிழ் கட்சிகளும் இந்தக் கோரிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

 

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் சென்று நேரடியாகப் பார்வையிடுவதற்கு அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

 

இதேவேளை, அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளார்.

 

இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
 

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்