மலேசியாவின் செந்துல் பஷர் என்ற இடத்திலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து 14 வயதுடைய டில்லுக்ஷன் என்ற சிறுவனே இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

 

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

 

டில்லுக்ஷனின் தந்தை கொழும்பில் தச்சுத் தொழில் புரிந்து வரும் நிலையில் தாயாரும் பேத்தியாரும் சுவிற்ஸர்லாந்தில் வசித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், கொழும்பிலுள்ள தனது பேரனை இலங்கைக்கு வெளியில் எடுத்து சுவிற்ஸர்லாந்திற்கு வரவைப்பதற்காக பிரான்ஸிலுள்ள தனது நண்பர் ஒருவரின் உதவியை பேத்தியான எஸ்.புஸ்பரட்ணம் நாடியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து சுவிற்ஸர்லாந்துக்கு டில்லுக்ஷனை அனுப்புவதற்காக சாந்தி என்ற பயண முகவருடன் 15 ஆயிரம் யூரோ பணம் வழங்குவதற்கு இருதரப்பும் உடன்பட்டது.

 

இந் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியாவுக்கான சுற்றுலா விசா ஒன்றை பெற்று பயண முகவர்கள் சிறுவனை மலேசியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

இச் சந்தர்ப்பத்தில் தங்களுக்குரிய முழுப்பணத்தையும் பெற்றுக்கொண்ட பயண முகவர்கள் சிறுவனை மலேசியாவிலுள்ள சாந்தி என்ற பயணமுகவரின் வீட்டில் தங்கவைத்துள்ளனர்.

 

இந்நிலையில், ஒருமாதம் கடந்தபோது சிறுவனை சுவிற்ஸர்லாந்துக்கு அனுப்புவதற்காக மேலும் 3 ஆயிரம் யூரோக்களை சாந்திக்கு அனுப்புமாறு சுவிற்ஸர்லாந்திலுள்ள புஸ்பரட்ணத்திடம் கோரப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் வரை சிறுவன் குறித்த எந்தவொரு தகவலும் புஸ்பரட்ணத்திற்கு கிடைக்கவில்லை.

 

பின்னர், பாரிஸிலுள்ள தனது நண்பரை அணுகியபோதே 3 ஆயிரம் யூரோக்கள் மேலதிகமாகக் கேட்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரிமாதம் ஒருவிதமாக தனது பேத்தியாருடன் தொலைபேசித் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட சிறுவன், தான் மலேசியாவில் இருப்பதாகவும் சாந்தி என்பவரால் துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தான்.

 

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி மலேசியாவுக்கு விரைந்த புஸ்பரட்ணம் மலேசிய புலனாய்வுப் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.

 


இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து நடத்திய தேடுதலில் சிறுவன் மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரியான ரி.மோகன் தெரிவித்தார்.

 

சாந்தி என்பவரால் தான் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர் தனக்கு அடித்ததாகவும் பல வீடுகளில் தன்னை வேலைக்கு அமர்த்தியதாகவும் தனது 8 மாத துன்பகரமான அனுபவத்தை சிறுவனான டில்லுக்ஷன் பொலிஸாரிடம் கூறியுள்ளான்.

 

இதனைத் தொடர்ந்து பயண முகவரான சாந்தியும் அவரது உறவினர் ஒருவரும் மலேசியப் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 
 

 
Back to Top
சுவிஸ் செய்தி
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

உலக புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரரின் பயிற்றுவிப்பாளராக போல் அனாகோன்

போல் அனாகோன், ரொஜர் பெடரரின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அனாகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

பிரிட்டன் அத்தியாவசிய சேவை ஊழியர் வேலை நிறுத்தம் : அரசு தடை

பிரித்தானியாவில் அத்தியாவசிய சேவை துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது பிரித்தானியா அரசுபிரித்தானிய அரசு செலவீனங்களை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை ஊழியர் அமைப்புக்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்த முடிவு செய...

Friday, 3 September 2010

விரிவு...
News image

மலேசியாவில் கர்ப்பிணிகளாகும் மாணவிகளுக்கு சிறப்பு பள்ளி

பள்ளிகளில் பலவிதம் உண்டு. ஆனால் மலேசியாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளி புது விதம். பள்ளிப் பருவத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகும் பெண்களுக்காக மலேசியாவில் இந்தத் தனி பள்ளி ஒன்று திற...

Thursday, 2 September 2010

விரிவு...
News image

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா அறிவிப்பு

ஈராக் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக் நாட்டின் பாதுகாப்பை அதன் மக்களிடமே ஒப்படைப்பதாகவும், ஈராக்கிற்காக அமெரிக்க ராணுவம் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றும் அவர் கூற...

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...

Friday, 3 September 2010

விரிவு...
News image

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவு கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விரட்டியடித்தனர்....

Thursday, 2 September 2010

விரிவு...
News image

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முயற்சி

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முற்பட்ட இருவர், தமிழ் நாட்டு தொண்டி கடற்பரப்பில் வைத்து வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch