ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெறவுள்ள சர்வகட்சிக் குழுவின் முதலாவது கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தலைமையிலான குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் தேர்தல்க் கடமைகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு சென்றிருப்பதாலும், கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் தங்கியிருப்பதாலும் கொழும்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் எம்மிடம் கூறினார்.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் இந்த சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தாம் கலந்துகொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளன.
எனினும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்பது பற்றி ஜே.வி.பி. இதுவரை தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவில்லையெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





