தோழர்கள் கந்தசாமி, சோமபால ஆகியோரின் நினைவு தினம் கொழும்பு அண்ணாமலை மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


கட்சி முக்கியஸ்தர் வ.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்துபேசிய விக்ரமபாகு கருணாரட்ன;


பெரும் துயரங்கள், பின்னடைவுகள், அழிவுகள் போன்ற யுகத்தை கடந்து செல்லவேண்டிய சூழலில் நாம் வாழுகின்றோம்.


1947 இல் நடைபெற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தின் போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தோழர் கந்தசாமி தனது இன்னுயிரை நீத்தார். உண்மையில் சமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி என்.எம்.பெரேரா போன்றவர்களே துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகியிருக்க வேண்டும். ஆனால், அந்த நிலையில் தோழர் கந்தசாமி தனது உயிரைக் கொடுத்து சமசமாஜக் கட்சித் தலைவரை காப்பாற்றினார்.


1980 இல் லேக்கவுஸ் பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சோமபால தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். 1996 மே தினம் தடைசெய்யப்பட்டது. தடையை மீறி ஊர்வலம் செய்தோம். பொலிஸார் எம்மீது மிருகத்தனமாக தாக்கினர். 28 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.


உயர் நீதிமன்றத்தில் நாம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவையடுத்து பொலிஸார் செய்தது தவறு என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


இன்று இடம்பெயர்ந்த மக்கள் இருக்கும் முகாம்கள் சிறைக் கூடங்கள் ஆகியுள்ளன. தினம் தினம் மக்கள் அங்கே இறக்கின்றனர். தொற்றுநோய்கள், போஷாக்கின்மை இம்மக்களை பெரிதும் வாட்டி வதைக்கின்றது. அங்கேயுள்ள மாணவ சமுதாயம் பாரிய இன்னல்களுக்குள் உள்ளனர். 10,000 இற்கு மேற்பட்டோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இன்று தமிழ் மக்களின் அவலநிலை உலக பிரச்சினையாக மாறியுள்ளது.


இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தின் மேல் அழுத்தம் வந்துகொண்டு இருக்கிறது. இவர்கள் கேட்ட 1.9 பில்லியன் கடன் கிடைக்காத நிலையில் காணப்படுகிறது. அன்று சர்வதேச நிறுவனங்களிடம் கடன்பட்ட போது இலங்கையின் இறைமை எங்கே போனது? அவர்கள் போட்ட நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டே கடன்பட்டனர். கிடைக்கவில்லை என்றவுடன் எமது இறைமையை நாம் விட்டுக்கொடுக்க தயாரில்லை என்கின்றனர். எட்டாத பழம் புளிக்கும் என்பது போல் கதையுள்ளது.


இன்று அரசாங்கம் எதிர்நோக்கும் அழுத்தம் என்ன? தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கு, என்பதே அழுத்தமாகும். உலக முதலாளித்துவ சக்திகளுக்கு அடிப்படையான சில விடயங்கள் உள்ளன. அதை நிறைவேற்றுவதில் அவர்கள் கடுமையாக இருப்பார்கள். இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் இன்று இவர்களுக்கு பாரிய தடையாக உள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக நாம் குரல் கொடுத்த போது எம்மை இனவாதிகள் திட்டினர். இன்று முதலாளித்துவ நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் மனித உரிமை மீறப்படும் நாடுகளுக்கு உதவி வழங்கினால் அவர்களது நாட்டை அவர்கள் கண்டிப்பார்கள்.


இதன் காரணமாகவே மனித உரிமைகள் விடயத்தில் அவர்கள் கடுமையாக உள்ளனர். நாம் போரை நிறுத்த பல போராட்டங்களை முன்னெடுத்தோம். யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தையை செய்யுங்கள் என்றோம். யுத்தத்தின் அழிவுகளையும் கொடுமைகளையும் விளக்கினோம். எமது போராட்டத்தின் போது எம்முடன் நின்றவர்கள் கூட போர் வென்ற பின் போர் வெற்றியாளர்களாக மாறி கூத்தாடினர். போர் வெற்றி மயக்கத்தில் எங்களை கொல்ல வேண்டும் என்றனர்.


எங்களுக்கு எதிராக புரளிகளை பரப்பினர். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். தமிழ்ப் பத்திரிகைகள் வீதியில் போட்டு எரிக்கப்பட்டன. சாஸ்திரம் சொல்கின்றவர்கள் கூட சிறையில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் எதிர்காலத்தை எப்படி நாம் பார்ப்பது.


இராணுவத்திற்கும் மேலும் 3 இலட்சம் பேர் சேர்க்கப்படவுள்ளனர். வன்னிப்பகுதி உட்பட தமிழ் பகுதிகளில் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. இராணுவம் என்பது இலங்கையில் முக்கிய தொழில் துறையாகவுள்ளது. இத்திட்டத்திற்கு எங்கே பணத்தை பெற போகின்றார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்தனர்.இவர்கள் இன்று தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்குங்கள் என நெருக்குதல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.


விடுதலைப் புலிகள் இடதுசாரி தலைவர்களுடன் இணைந்து செயற்பட ஒருபோதும் விரும்பவில்லை. பொங்கு தமிழ் நிகழ்வுகளுக்குக் கூட அவர்கள் எங்களை அழைக்கவில்லை. நாங்கள் திரும்ப திரும்ப சர்வதேச இடதுசாரிகளின் ஆதரவினை வலியுறுத்தினோம். அவர்கள் ஏற்கவில்லை. இன்று தமிழர் தாயகம் சாம்பல் ஆக்கப்பட்டுள்ளது.இன்று தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு பலமுனைகளில் அழுத்தங்கள் எழுந்துள்ளன.


13 வது திருத்தத்தில் ஒன்றுமே இல்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. 13 வது திருத்தத்திற்கு மேல் என்றால் எதை கொடுக்க போகின்றார்கள். இன்று விமல்வீரவன்சவும் நானும் ஒன்றையே கதைக்கின்றோம். விமல்வீரவன்ச கூறுகின்றார் நாங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, ஏன் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்கிறார். நானும் கேட்கின்றேன் அரசாங்கம் அதிகாரத்தை வழங்க தயார் என்றால் ஏன் மக்களை அநியாயமாக அழித்தீர்கள்.


இன்று தென்னிலங்கையில் உள்ளவர்கள் ஒன்றை உணர வேண்டும்.தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைத்தால்தான் அதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்திற்கு விமோசனம் கிடைக்கும். இல்லையெனில் ஒன்றுமே நடக்காது. அமெரிக்கா சுற்றுலாப் பயணிகளை தடுத்துள்ளது. நாடு மிகவும் பிரச்சினையின் காலகட்டத்தில் நிற்கிறது.


 

 
Back to Top
சுவிஸ் செய்தி
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

உலக புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரரின் பயிற்றுவிப்பாளராக போல் அனாகோன்

போல் அனாகோன், ரொஜர் பெடரரின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அனாகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

பிரிட்டன் அத்தியாவசிய சேவை ஊழியர் வேலை நிறுத்தம் : அரசு தடை

பிரித்தானியாவில் அத்தியாவசிய சேவை துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது பிரித்தானியா அரசுபிரித்தானிய அரசு செலவீனங்களை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை ஊழியர் அமைப்புக்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்த முடிவு செய...

Friday, 3 September 2010

விரிவு...
News image

மலேசியாவில் கர்ப்பிணிகளாகும் மாணவிகளுக்கு சிறப்பு பள்ளி

பள்ளிகளில் பலவிதம் உண்டு. ஆனால் மலேசியாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளி புது விதம். பள்ளிப் பருவத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகும் பெண்களுக்காக மலேசியாவில் இந்தத் தனி பள்ளி ஒன்று திற...

Thursday, 2 September 2010

விரிவு...
News image

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா அறிவிப்பு

ஈராக் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக் நாட்டின் பாதுகாப்பை அதன் மக்களிடமே ஒப்படைப்பதாகவும், ஈராக்கிற்காக அமெரிக்க ராணுவம் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றும் அவர் கூற...

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...

Friday, 3 September 2010

விரிவு...
News image

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவு கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விரட்டியடித்தனர்....

Thursday, 2 September 2010

விரிவு...
News image

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முயற்சி

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முற்பட்ட இருவர், தமிழ் நாட்டு தொண்டி கடற்பரப்பில் வைத்து வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch