இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வணங்காமன் என பெயரிடப்பட்ட கப்பலை ஐரோப்பியா வாழ் இலங்கை தமிழர்கள் அனுப்பி வைத்தனர்.
ஆனால் இக்கப்பலில் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகித்து அதை இலங்கை கடற்பகுதியில் அனுமதிக்க அந்நாடு மறுத்து விட்டது. இக்கப்பல் சந்தேகத்திற்கிடமானது என இந்திய கடற்படையும் தெரிவிக்கவே, வணங்காமன் சென்னை துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படாமல், சர்வதேச கடல் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
வணங்காமன் கப்பலை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய மாநில அரசுகளின் முயற்சியினால், சென்னை துறைமுகத்திற்குள் வணங்காமனை அனுமதிப்பது என்றும், அதிலுள்ள பொருட்கள் மற்றொரு கண்டெய்னர் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்புவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அரசு அனுமதியை அடுத்து, நேற்று வியாழக்கிழமை இரவு வணங்காமன் சென்னை துறைமுகத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இக்கப்பலில் உள்ள பொருட்கள் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படும் என தெரிகிறது.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


