இதில் ஒரு தொகுதி மக்கள் (5000 பேர்) மதவாச்சி மன்னார் வீதியில் அநுராதபுரம் எல்லையில் மாங்குளம், தர்மபுரம் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.


அகதி முகாம்களில் நிலவும் இடநெருக்கடி காரணமாகவே இவ்வாறு எல்லைக்கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தில் இவர்கள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


எனினும், வவுனியா மாவட்ட செயலகமே இவர்களின் நிர்வாகம் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இதனிடையே வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் நலன்புரி நிலையமும் மூடப்பட்டுள்ளது.


இதேவேளை, வன்னியில் இருந்து வந்து நிவாரணக்கிராமங்களில் தங்கியிருந்த சிலர் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களைத் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறவந்த சிலர் மீண்டும் முகாம்களுக்கு வரவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்