இலங்கை தமிழர்களுக்கான நிவாரண பொருட்களுடன் நடுக்கடலில் தவித்து கொண்டு இருந்த வணங்காமண் கப்பலை சென்னை துறைமுகத்துக்கு அனுமதிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் வணங்காமண் கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் வந்தது.

 

சுங்கத்துறை அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் படை பிரிவு, கிழூ பிராஞ்ச் போலீசார் அந்த கப்பலை முழுவதுமாக பரிசோதனை செய்தனர். கப்பல் கேப்டன் முஸ்தபா அகமதுவிடமும் குடியுரிமை அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள். மேலும், அந்த கப்பலுக்கான ஆவணங்கள் அனைத்தையும் அதிகாரிகள் சரிபார்த்தனர்.

 

அதைத் தொடர்ந்து வணங்காமண் கப்பலில் இருந்து நிவாரண பொருட்களை இறக்கும் பணி நேற்று காலை 6.15 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. ராட்சத கிரேன் உதவியுடன் கப்பலில்  பேக்' செய்து வைக்கப்பட்டிந்த பொருட்கள் இறக்கப்பட்டு வருகின்றன.

 

நிவாரண பொருட்களுடன் வேறு ஏதாவது பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா? என்று சுங்கத்துறை அதிகாரிகளும், துறைமுகம் போலீசாரும் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக மோப்ப நாய் பிரிவும் அங்கு வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

 

அதன் பிறகு காலியாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கண்டெய்னர்களில் நிவாரண பொருட்கள் ஏற்றப்படுகின்றன. இதில், கோதுமை மாவு, அரிசி, சோயா மாவு, உலர் பழங்கள், பால்பவுடர், சமையல் எண்ணை, மருந்து பொருட்கள், துணிகள் போன்றவைகள் அடங்கும். மொத்தம் 635 டன் நிவாரண பொருட்கள் இருப்பதாகவும், அவற்றை இறக்கும் பணி இன்று (சனிக்கிழமை) மாலையில் முடிவடையும் என்று சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இது குறித்து சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுபாஷ் (பொறுப்பு) கூறியதாவது:

வணங்காமண் கப்பலில் இருந்து நிவாரண பொருட்களை இறக்கி 30 கண்டெய்னர்களில் நிரப்புவோம். நாளை (இன்று) மாலைக்குள் நிவாரண பொருட்களை இறக்கும்பணி முடிவடையும்.

நிவாரணப் பொருட்கள் கண்டெய்னர்கள் அனைத்தும் சரக்குப்பெட்டக முனையத்தில் வைக்கப்படும். கொழும்பு   சென்னை இடையே இயக்கப்படும்  கேப் கொலரடா' என்ற சரக்குக்கப்பல் 5 ந் தேதி சென்னை துறைமுகத்திற்கு வரும். அந்த கப்பலில் இந்த நிவாரண பொருட்களை ஏற்றி 6 ந் தேதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

அதன்பிறகு 2 நாட்களில் அதாவது, 8 ந் தேதி நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடையும். சரக்குக் கப்பலில் சிப்பந்திகளை தவிர, யாரும் செல்ல முடியாது. அதனால் இலங்கைக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும்


கேப் கொலரடா' கப்பலில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் செல்வது என்பது கடினம்தான் என்றார்.

 
  1. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  2. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  3. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  4. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  5. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  6. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  7. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  8. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  9. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  10. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு

கட்டுரைகள்