உறவினர்களை பிரிந்து முகாம்களில் மன அழுத்தத்துடன் இருக்கும் மக்களை விரைவில் அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூறியது. இதையடுத்து 6 மாதத்தில் முகாம்களில் உள்ள தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை கூறியது. ஆனால் தற்போது இலங்கை அரசு ஓசை இல்லாமல் வேறு ஒரு திட்டத்தை அரங்கேற்ற தொடங்கி உள்ளது.
 

 

தமிழர்கள் பகுதியில் சீரமைப்பு பணி முடிய 3 வருடமாகும் என்று இலங்கை அரசு சொல்கிறது. கண்ணி வெடிகளை அகற்ற இந்த கால அவகாசம் தேவை என்று சொல்கிறார்கள். இந்த பணி முடிய 5 ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்றும் இலங்கை அதிகாரிகள் சொல்லியபடி உள்ளனர்.
 

இந்த நிலையில் உலக நாடுகள் எதிர்ப்பை சமாளிக்க முள்வேலிக்கு பதில் சுவர் கட்ட தொடங்கி உள்ளனர். முகாம்களில் ரகசியமாக சில கட்டுமான பணிகளும் நடக்கின்றன. இதன் மூலம் ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி திட்டம் தீட்டி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.


கிளிநொச்சி, முல்லைத்தீவில் தமிழர்களை விரட்டி விட்டு, அந்த பகுதிகளை முழுமையான சிங்களர்கள் குடியிருப்புகளாக மாற்றும் சதி திட்டமாக இது கருதப்படுகிறது. எனவே அகதிகள் முகாம்களை நிரந்தர முகாம்களாக மாற்றும் முயற்சிக்கு தமிழர்களிடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்