பொதுத்தேர்தலுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தா வில் வெளியிடப்படவிருக்கின்றது.
இன்று காலை எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறும் வைபவத்தின் போது இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியில் தேர்தல் விஞ்ஞாபனம் இரு பிரிவுகளாக வெளியிடப்படவிருக்கின்றது. இன்று பிரதான விஞ்ஞாபனம் வெளியாகும்.
அதேசமயம் பெண்களுக்கான ஒரு இணைப்பு விஞ்ஞாபனம் நாளை மறுதினம் வியாழக்கிழமை வெளியிடப்படவிருப்பதாக ஐ.தே.க.செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்நகரில் நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ரணில் விக்கிரமசிங்க வடகிழக்கு தமிழ் மக்களுக்கான தனது வேண்டுகோள் எனும் தலைப்பிலான பிரசுரமொன்றும் வழங்கப்பட விருக்கின்றது.
ஐ.தே.முன்னணியின் விஞ்ஞாபனம்ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமும் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கின்றது.
மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள விருக்கின்றனர்.
இன்று காலை 10 மணிக்கு இடம் பெறும் இவ்வைபவத்தில் ஜே.வி.பி தலைவர் சோமவன்ஸ அமரசிங்கஇசெயலாளர் ரில்வின் சில்வாஇ விஜித ஹேரத்இ அநுரகுமார திசாநாயக்க ஆகியோருடன் ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவும் ஜனநாயக தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வர்.
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்





.jpg)











