ஐ.நா.வுடனும் அதன் முகவரமைப்புகளுடனும் தற்போது இடம்பெற்றுவரும் சிறிய சண்டையானது யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கான சர்வதேச நிதி உதவியைக் குறைத்துவிட மாட்டாது என்று கலாநிதி ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார்.
புனர்வாழ்வு,மீள்குடியேற்றத்திற்கான நிதி குறைந்துவிடவில்லை என்றும் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவைப்படும் நிதியுதவியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான உதவி இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்திருப்பதாகவும் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார்.
இந்தியா அதிகளவு உதவியை வழங்கி வருகிறது. அரசாங்கம் தலையீடு செய்வதாகக் குற்றஞ்சாட்டி ஐ.நா. முகவரமைப்புகளோ ஏனைய சர்வதேச தொண்டர் நிறுவனங்களோ வெளியேறினால் அல்லது தமது நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டால் இந்தியாவின் உதவியானது அதிகளவு பலமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் செயலணிப் பிரிவுக்குத் தமது செயல்திட்டங்கள் தொடர்பாக விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஐ.நா. முகவரமைப்புகள் சர்வதேச தொண்டர் நிறுவனங்களை அரசாங்கம் கேட்டு வருகிறது.
ஒத்துழைப்பு மற்றும் செயற்பாட்டுத் திறனை உறுதிப்படுத்துவதற்காக முன்கூட்டியே அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென செயலணிப் பிரிவும் சம்பந்தப்பட்ட மத்திய,உள்ளூராட்சி நிர்வாகங்களும் ஐ.நா. முகவரமைப்புகள்,தொண்டர் நிறுவனங்களைக் கேட்கின்றன.
ஆனால், இதனைச் செய்வதற்கு ஐ.நா. முகவரமைப்புகளும் தொண்டர் நிறுவனங்களும் தயங்குவதாக விஜயசிங்க கூறியுள்ளார்.
நிரந்தர வீட்டுவசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென அரசாங்கம் விரும்புவதாகவும் ஆனால், இந்த அமைப்புகள் இது தொடர்பாக ஆர்வம் காட்டவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். பாரிய செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும் எனவும் உயர்ந்த சம்பளங்களுடன் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறைக்கப்பட வேண்டும் எனவும் அரசு விரும்புகிறது.
யாழ்ப்பாணத்தில் 100 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை சர்வதேச முகவரமைப்புகள் செலவிட்டுள்ளன. ஆனால், அந்தச் செலவீனம் தொடர்பாக களத்தில் எந்தவொரு ஆதாரத்தையும் அரசாங்கம் பார்க்கவில்லை என்று மனித உரிமைகள் அமைச்சின் செயலாளராக இருந்த டாக்டர் ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார்.
சகல சர்வதேச அரசசார்பற்ற தொண்டர்களும் ஐ.நா. முகவரமைப்புகளும் மோசமானவை அல்ல. யூ.என்.டி.பி. உலக உணவுத் திட்டம் என்பன ஒத்துழைப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாகவுள்ளன.
தொண்டர் நிறுவனங்கள், அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களில் பல அரசின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. மோதல் இடம்பெற்ற பகுதிகளில் 50 இற்கும் மேற்பட்டவை பணியாற்றி வருகின்றன.
ஐ.நா. நிறுவனங்களில் சில தமது வெளிநாட்டவர்களுக்கு வேலை வழங்குவதைக் குறைத்து உள்நாட்டுப் பணியாளருக்கு தொழில்வாய்ப்பை வழங்கியுள்ளன என்றும் ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார்.
- மட்டக்களப்பு கூட்டமைப்பினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
- சட்ட விரோதமாக மின்சாரம் பாவித்ததாக 164 பேருக்கு சுமார் 28 இலட்சம் அபராதம்
- யாப்பு சீர்திருத்தம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதே
- விடுதலைப்புலிகளின் ஊடகத்தில் பணிபுரிந்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
- களுவாஞ்சிகுடி விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் காயம்
- ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
- கடை உரிமையாளரின் காதை கடித்த பிரதியமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி கிராமவாசிகளால் தாக்கப்பட்டார்
- இந்தியாவின் உதவிதேவை ஆனால் பிரச்சினையில் தலையிடக் கூடாது:சம்பிக்க ரணவக்க
- கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி
- 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் ஏற்றுக் கொள்ளவில்லை -ரணில்





.jpg)







.jpg)



