தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டுவரும் செய்தி வெளியாகியதை அடுத்தும் அதனைத் தடுத்துவிட முடியாத கையறு நிலையிலே புலம்பெயர் தமிழ் மக்கள் இருப்பதனாலும் விசனமடைந்த நிலையில் இருந்துவரும் தமிழ் மக்களின் உணர்வுகள் இந்த அவசர ஒன்றுகூடலிலே வெளிப்பட்டது. சிறீலங்கா அரசின் இனவெறிக் கொலைத் தாண்டவத்தையும், சர்வதேசத்தின் மௌனத்தையும் கண்டிக்கும் கோசங்களையும் எழுப்பியவாறு பிற்பகல் 4 மணி முதல் குழுமியிருந்த மக்கள் உணரச்சிப் பிழம்புகளாக மாறியிருந்தனர்.


இந்த நிலையில், சிங்களத்தின் இனவெறிப் போரில் இந்தியாவின் பங்களிப்பை உலகிற்கு உணர்த்தும் நோக்குடன் இளையோர் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் திடீரென அருகே அமைந்திருந்த இந்தியத் தூதரகத்தை நோக்கிச் ஊர்வலமாகச் சென்றனர். மக்கள் இனங்கானாதவாறு ஏற்கனவேயே இந்திய தேசியக்கொடி அகற்றப்பட்டிருந்தது.



மாலை 7.00 மணியளவில் அங்கே குழுமியோர் கோசமெழுப்பிக் கொண்டிருக்கையில் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். இதேவேளை, குழுமியிருந்தோர் மத்தியில் இருந்து தூதரகத்தை நோக்கிக் கற்கள் வீசப்பட்டன. அதில் தூதரகத்தின் கண்ணாடிகள் சில உடைந்தன. இதனையடுத்து, காவல்துறையினர் இறப்பர் குண்டுகளால் சூடு நடத்தினர். இதன்போது இளைஞர் ஒருவருக்கு மூக்கில் காயமேற்பட்டது. தூதரகத்தினுள் இருந்த பணியாளர்கள் பின்புற வாசலினால் வெளியேற்றப்பட்டனர்.

இதன் பின்னர், கோசங்களை எழுப்பியவாறே அங்கிருந்து அகன்ற மக்கள் நாடாளுமன்ற முன்றலுக்கு மீண்டும் வந்து இரவு 11.00 மணிவரை அங்கே குழுமியிருந்து விட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.
| < முன் | பின் > |
|---|
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


