ஆர்ப்பாட்டம் சற்றுப் பின்னர் வன்முறையாக வெடித்தது. இதனையடுத்து தண்ணீர்ப் பிரயோகம் செய்த காவல்துறையினர், ஆர்ப்பாட்;டத்தில் ஈடுபட்டோர் முட்டை மற்றும் போத்தல்களை வீசியதையடுத்து தடியடிப் பிரயோகம் செய்தனர். இதன்போது ஒரு சிலர் காயங்களுக்கும் இலக்காகினர்.



இதேவேளை, திடீரென ஐ.நா. வளாகத்துக்குள் பாய்ந்து சென்ற இளைஞர் ஒருவர் அங்கே பறந்து கொண்டிருந்த சிறி லங்கா தேசியக் கொடியை கிழித்து அகற்றினார். குறித்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டதை அடுத்து கூடியிருந்தோர் மத்தியில் ஆவேசம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து வீதிகளின் பலபக்கங்களிலும் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போக்குவரத்தைத் தடைசெய்ததுடன் காவல் துறையினருடன் பலத்த வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.




ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறையினருடனான முரண்பாடு பெரும் மோதலாக வெடித்தது. சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை வாளிகளால் காவல் துறையினர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போதிலும், காவல் துறையினர் குறைந்தளவிலான பலத்தையே பிரயோகித்ததை அவதானிக்க முடிந்தது.



மறுபுறம், காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் உக்கிரமடைந்ததை அடுத்து பெருமளவிலான மக்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.

இதேசமயம், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளையோர் பிரதிநிதிகள் மூவர் ஐ.நா. சபைக்குள் சென்று பேச்சுக்களில் ஈடுபட்டனர். சிறி லங்கா அரசின் அனுமதி இன்றி அந்த நாட்டுக்குள் பிரவேசிக்கவோ, முறையான ஆதாரங்கள் இன்றி சிங்கள அரசின் மீது போர்க்குற்ற விசாரணைகளை நடாத்தவோ தமக்கு அனுமதி இல்லை என அங்கே தெரிவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
| < முன் | பின் > |
|---|
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


