குறுகிய காலத்தில் சுவிஸ் தமிழ் இளைஞர்களால் 20 000 கையொப்பங்கள் பெறப்படட்து. அதிகளவு சுவிஸ் மக்களால் கையொப்பமிடப்பட்ட இம்மனு காலத்திற்கு ஏற்றவாறு புதிய கோரிக்கைகளை உள்ளடக்கி இன்று 08.06.09 திங்கள் 12:15 மணியளவில் சுவிஸ் அரசாங்கத்தின் உயர் அதிகாரியான Herr Henrry Sickert என்பவரிடம் கையளிக்கப்பட்டது.


பாராளுமன்ற வாசலில் பிரத்தியேகமாக ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்மக்களுடன் சுவிஸ் நாட்டவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது இந்து மதகுருவான திரு. சர்மா அவர்களும் சூரிச் புளுக்காவன் பகுதி கத்தோலிக்க மதகுருவான திரு. Walter Meier ஆகியோரால் வன்னிப்பகுதியில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. திரு. Walter Meier தனது பேச்சின்போது சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் தமது உறவுகளை இளந்து மிகவும் துக்ககரமான ஓர் சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும் சுவிஸ்மக்களை அவர்களுக்காக பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

முரசம்

முரசம்


இதேவேளை சிற்ப்பு விருந்தினர்களாக பாரளுமன்றஉறுப்பினரும் வெளிவிவகார அரசக்குழுவின் உறுப்பினருமான திரு. Rudolf Rechsteiner மற்றும் பாராளுமன்ற உறுபினரும் வெளிவிவாகர அமைச்சர் திருமதி. Micheline Calmy-Rey  அவர்கட்கு மிக நெருங்கியவருமான திருமதி. Maria Roth-Bernasconi உம் கலந்துகொண்டனர். 

திரு. Rechsteiner அவர்கள் சுவிஸ் அரசாங்கம் இலங்கையில் நடைபெற்ற  போரையும் அதன்பின் நடைபெற்றுவரும் நடவடிக்கைகளையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

முரசம்


பின்னர் (So4Ta)  நிறுவனத்தலைவர் 1948 முதல் இன்றுவரையான தமிழின அழிப்புகள் பற்றி அவர் உரையாற்றும் போது குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழர் இலங்கையரசின் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகவே ஆயுதம் ஏந்தி போராடினர். இன்று அவ்வாயுதப்போராட்டம் நசுக்கப்பட்டதே தவிர  தமிழர்களிர்க்கான ஒர் தீர்வு காணப்படவில்லை. தமிழர் தமது ஆயுதப்போரட்டத்தின் முன்னர் எப்படி இருந்தனரோ அதேபோன்ற சூழலிலே இன்று மீண்டும் வாழ்துவருகின்றனர். எனவே சுவிஸ் அரசாங்கம் விரைந்து செயற்ப்பட்டு வவுனியாவில் அடைத்து வைக்கப்படிருக்கும் மக்களை அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்வதற்கான உதவிகளை புரியவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இறுதியாக (So4Ta)  வின் இரண்டாம் நிலை தலைவரான திரு. Christoph Schmitter   குறிப்பிடும் போது தமது அமைப்பு தொடர்ந்தும் தமிழ்மக்களிற்காக சேவை செய்வாகள் என அறிவித்திருந்தார். இவர் சுவிஸின் மத்திய அரசில் தொலிற்க்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு பொறுப்புவகிப்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முரசம்


இதனைத் தொடர்ந்து 14 00 மணியளவில் Swiss Solidarity for Tamils இன் முக்கிய உறுப்பினர்கள் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பொறுப்பாளருடனான திரு. Fux Pierre-Yves சந்திப்பு ஒன்றில் பங்கேற்றனர். இந்நிறுவனத்தின் பேச்சாளர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தமிழ்மக்களின் தொடர் போராட்டங்கள் சுவிஸ் அரசின் கவணத்தை எமது பக்கம் திருப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் திரு. Fux Pierre-Yves அவர்கள் நாளை (09.06.09) இலங்கை செல்லவிருப்பதாகவும் அங்கு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை அவர் சந்திக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். தாம் அவரிடம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து தமிழ்மக்களின் உண்மை நிலை பற்றி கேட்டுடறியும்படி கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.


மேலும் சுவிஸ் அரசு செய்ய எண்ணியிருக்கும் வேலைத்திடங்கள் போன்றே அவர்கள் கையளித்த மனுவில் உள்ள கோரிக்கைகளும் உள்ளதாகவும் தாம் முடிந்தளவு தமிழ்மக்களிற்கு உதவுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்