SmallMediumLarge NarrowWideFluid
பாகிஸ்தான் கராச்சியில் தீ விபத்து 40 பேர் உடல் கருகிப் பலி;20 பேர் காயம் அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
சனி, 10 சனவரி 2009 20:11

பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 பேர் பலியானதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

 

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியின் சான்டி நகர்ப்பகுதியிலேயே இத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

 

மேலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவே இத்தீவிபத்து இடம்பெற்றிருந்ததால் பெரும்பாலானவர்கள் நித்திரையில் இருந்தபோதே தீயினால் எரிந்து பலியாகியுள்ளனர்.

 

மின்சாரக் கேபிள்கள் வீட்டுக் கூரை ஒன்றின் மேல் அறுந்து விழுந்ததைத் தொடர்ந்தே இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளது.


மின் ஒழுக்கினைத் தொடர்ந்து வேகமாகப் பரவிய தீ 30 க்கும் மேற்பட்ட வீடுகளை எரித்து நாசமாக்கியுள்ளது.

 

தீயினைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புப் படையினர் தீ பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் ஒரு பகுதியூடாகவே வெளியேறக் கூடிய நிலை உள்ளதாகவும் ஏனைய பகுதிகளில் தீ கடுமையாகப் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

இதனால் தீ பரவிய பின்னரும் வெளியேறுவதற்கு வழியில்லாத காரணத்தினாலேயே அநேகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆகும்.


அத்துடன் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.