| மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பதவியேற்ற முதல் நாளிலேயே நடவடிக்கை - பராக் ஒபாமா உறுதி |
|
|
| [ வா.கி.குமார் ] |
| திங்கள், 12 சனவரி 2009 20:18 |
பதவியேற்ற முதல் நாளிலேயே மத்திய கிழக்கில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாங்கள் புதிய அணுகுமுறையொன்றை முன்னெடுக்கவுள்ளோம். மத்திய கிழக்கில் அணு ஆயுத போட்டியொன்று உருவாக்கப்படுவதற்கு அணு ஆயுத வல்லமையுள்ள ஈரான் தூண்டுகோலாக உள்ளது'' எனத் தெரிவித்த பராக் ஒபாமா, ""நமது பிரச்சினைகளின் மூலõதாரம் தொடர்பில் தெளிவுபடுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் நாம் மதிப்பளிப்போம். நாங்கள் அதற்கு தயாராகி வருகிறோம்'' என்று கூறினார்.
ஈரான் மட்டுமல்ல, ஹமாஸ் போராளிகள், ஹிஸ்புல்லாஹ் இயக்கங்கள் என்பனவும் அமெரிக்காவின் புதிய அரசாங்கத்திற்கு சவாலாக உள்ளதாக தெரிவித்த ஒபாமா, தான் ஜனாதிபதி பதவியை ஏற்றவுடனேயே மத்திய கிழக்கிலான பரந்தளவு சமாதான செயற்கிரமங்களை ஆரம்பிக்கவுள்ளதாக கூறினார்.
ஈரானானது லெபனானிய ஹிஸ்புல்லா போராளிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
""நான் இவ்விவகாரம் தொடர்பில் தற்போது செயற்பட்டு வருகிறேன். எனவே, நான் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக சேவையாற்ற ஆரம்பிக்கும் முதல் நாளிலேயே மத்திய கிழக்கிலான முழுமையான சமாதான செயற்கிரமமொன்றில் உடனடியாக களம் இறங்க முடியும் என ஒபாமா தெரிவித்தார். |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








பதவியேற்ற முதல் நாளிலேயே மத்திய கிழக்கில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.