மேற்படி புகையிரதமானது தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்று அநேக வீடுகளின் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்கரை நகரமான வியரெக்கியோ நகரில் இடம்பெற்ற இந்த விபத்தின்போது வீடுகள் இடிந்து விழுந்ததில் பலர் பலியாகியுள்ளதுடன் பெருந்தொகையானோர் காயமடைந்துள்ளனர்.


இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் பலியானவர்களின் தொகை மென்மேலும் அதிகரிக்கக் கூடிய அபாயமுள்ளதாகவும் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த புகையிரத வெடிப்பு சம்பவமானது அந்நாட்டு நேரப்படி திங்கட்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. 14 தாங்கிகளைக் கொண்ட இப்புகையிரதத்தில் திரவ பெற்றோலியம் வாயு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இரு எரிவாயு நிரப்பப்பட்ட தாங்கிகள் வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படுகிறது.


வெடிப்பு இடம்பெறுவதற்கு முன் புகையிரத தாங்கிகளிலிருந்த எரிவாயு வெளியேறி அருகிலிருந்த வீடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வெடிப்பையடுத்து புகையிரதத்தைச் சுற்றியுள்ள 300 மீற்றர் பரப்பில் டசின் கணக்கான சிறிய வீடுகள் சேதமடைந்துள்ளன.


அத்துடன் இரு சிறிய கட்டிடங்கள் இந்த வெடிப்பால் நேரடியாக பாதிக்கப்பட்டு எரிந்து இடிந்து விழுந்துள்ளன. அக்கட்டிட இடிபாடுகளின் கீழ் மேலும் பலர் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் குழந்தையொன்றும் உள்ளடங்குகிறது.


மேலும் புகையிரதத்துடன் பல வீடுகளும் கட்டிடங்களும் தீப்பற்றி எரிந்ததால் எங்கும் புகை மூட்டமாக காணப்பட்டது. அப்பிரதேசத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் வரை வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

 
  1. 'முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்'
  2. பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மீது துப்பாக்கிச் சூடு-தீவிரவாத தாக்குதல் அல்ல
  3. பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் -பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்
  4. பிஜி தீவை கடும் புயல் தாக்கியது-அவசரநிலை அமல்
  5. நிபுணர்கள்குழுஅமைப்பு : பான்கீ மூன் ,நவநீதம்பிள்ளை பேச்சுவார்த்தை
  6. சாவகச்சேரியில் வர்த்தகரின் மகன் கடத்தல்
  7. பழம்பெரும் பிரபுக்கள் சபையை ஒழிக்கிறது இங்கிலாந்து
  8. பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
  9. ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
  10. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது

கட்டுரைகள்