இந்த ஒத்திகை புகைப்படங்கள்தான் மைக்கேல் ஜாக்சனின் கடைசி படங்களாக அமைந்துவிட்டன. லண்டன் நிகழ்ச்சி மூலம் பாப் இசை உலகிற்கு மீண்டும் திரும்ப முயன்ற மைக்கேல் ஜாக்சனின் முயற்சி ஈடேறாமலேயே போய்விட்டது.
ஒளி விளக்குகளின் பின்னணியில் மைக்கேல் ஜாக்சன் நிகழ்த்தவிருந்த லண்டன் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையின்போது மிகவும் சுறுசுறுப்புடனும்இ தெம்பாகவுமே மைக்கேல் ஜாக்சன் காணப்பட்டதாக லண்டனிலிருந்து வெளியாகும் "சன் ஆன்லைன்' செய்தி வெளியிட்டுள்ளது.
முந்தைய ஒத்திகைகளைக் காட்டிலும் இந்த ஒத்திகையில் ஜாக்சன் மிகவும் துடிப்போடு இருந்ததாக நிகழ்ச்சியைப் பார்த்தவர்களை மேற்கோள்காட்டி இணையதள செய்தி தெரிவிக்கிறது. மறக்கமுடியாத நிகழ்ச்சியாக லண்டன் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற முனைப்போடு ஜாக்சன் செயல்பட்டார்.
சக நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் தமாஷாக பேசி சிரித்து மகிழ்ந்ததையும் அருகிலிருந்தவர்கள் பார்த்துள்ளனர். 48 மணி நேரத்துக்கு முன் மைக்கேல் ஜாக்சனை ஒத்திகையின்போது பார்த்தவர்களுக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை நம்புவது மிகவும் கடினம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேடைக்கு அவர் வருவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்துமே வித்தியாசமானவை. பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாக புகைப்படக் கலைஞர் கெவின் மசூர் தெரிவித்தார்.
ஒத்திகையைப் பார்த்தவுடனேயே மைக்கேல் ஜாக்சன் மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்பிவிட்டார். இனி மேடைகளில் ஜாக்சனின் ஆதிக்கமே இருக்கும் என்று நம்பிக்கையூட்டும் வகையில் அவரது நடனம் அமைந்திருத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார் என்று கெவின் மசூர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


