SmallMediumLarge NarrowWideFluid
சூடான் விமான விபத்தில் 100 பேர் பலி அச்சிடு E-mail
புதன், 11 ஜூன் 2008 08:12
sudanfli.jpgசூடானில் நேற்றிரவு இடம்பெற்ற விமான விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சி சேவையொன்று தெரிவித்துள்ளது. இதன்போது 50 க்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 ஜோர்தான் தலைநகர் அம்மானிலிருந்து புறப்பட்ட விமானமொன்றே சூடான் கடோமில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சீரற்ற காலநிலை, சுழல்காற்று மற்றும் மழையின் காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டது.

இந்த நிலையில் விமானத்தின் இயந்திரம்  தீப்பற்றிக் கொண்டுள்ளதாகவும், இது ஒரு வெடிப்பு சம்பவமல்லவெனவும் விமான நிலையப் பணிப்பாளர் யூசுப் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
 
எங்களால் இந்த சம்பவம் தொடர்பில் சரியான தகவலைக்கூற முடியாதென்பதுடன், இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றியும் எதுவும் கூறமுடியவில்லையெனவும் குறிப்பிட்ட விமான நிலையப் பணிப்பாளர் யூசுப் இப்ராகிம், அதிகளவிலான பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார்.  
 
முதற்கட்ட அறிக்கையின் படி 203 பயணிகளில் அரைவாசிப் பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், இதில் 14 விமானப் பணியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.