குறிப்பாக கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் இதில் மிகத் தீவிரமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் மறைந்த பெனாசிரின் கணவருமான ஆசிப் அலி சர்தாரியும் முன் வந்துள்ளார்.
முஷாரப் மீது நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்காக ஷெரீப் உருவாக்கியுள்ள 10 அம்ச கண்டன தீர்மானத்தில், ராணுவ ஆட்சியை இரண்டு முறை அமல்படுத்தியது, அரசியல் சட்டத்தை மாற்றியது, நவாஸ் ஷெரீபை சிறையில் தள்ளியது, பிரதமருக்கே தெரியாமல் கார்கில் பகுதியில் படைகளை ஊடுருவ வைத்தது, இதன் மூலம் 800க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாக காரணமாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சிறை வைத்தது, துப்பாக்கி முனையில் சர்வாதிகார ஆட்சி நடத்தியது, இராணுவத்தை தன் தனிப்பட்ட படையாகப் பயன்படுத்தியது, தனக்கு ஆதரவான அதிகாரிகளுக்கு சலுகை காட்டியது, தனது ஆட்சி நீடிப்பதற்காக அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இராணுவத்தை பயன்படுத்தியது, சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இராணுவத்தை ஏவி விட்டு அறிவிக்கப்படாத போரை நடத்தியது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் இதில் கூறப்பட்டுள்ளன.
நவாஸ்-சர்தாரி கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால் இந்தத் தீர்மானம் நிறைவேறுவது நிச்சயமாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந் நிலையில் கண்டனத் தீர்மானம் நிறைவேறுவதற்குள் முஷாரப் இராஜினாமா செய்துவிட வேண்டும் என அரசியல் ஆலோசகர்கள் அவருக்கு அறிவுறுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக செய்திகள்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்



.jpg)


