புஷ்ஷின் இந்த விருப்பத்தை, ஜனாதிபதி மாளிகையின் ஊடகச் செயலாளர் டானா பெரினோ வெளியிட்டுள்ளார். 
 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிப் பிரதிநிதிகளின் கூட்டம் டில்லியில் நேற்றுப் புதன்கிழமை நடைபெறுவதற்கு முன்னர் இந்தக் கருத்தை அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் ஏற்பட்டுள்ள  சர்ச்சைகளை  ஜனாதிபதி புஷ் இற்கு அவ்வப்போது தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்ட ஊடகச்  செயலாளர் டானா பெரினோ, இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதென்று புஷ் கருதுவதாகக் கூறினார். 
 
அடுத்த வருடம்  ஜனவரி மாதம் 20 ஆம் திகதியுடன் புஷ்ஷின் பதவிக் காலம் முடிவடைவதாகவும், புஷ்ஷின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற புஷ் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
 
அமெரிக்காவில் அடுத்து பதவிக்கு வரவுள்ள  ஆட்சியாளர்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிப்பார்களென அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் காசே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்