ரஷிய அதிபராக பதவியேற்ற பின், முதல்முறையாக அமெரிக்க அதிபர் புஷ்ஷை ஜி-8 மாநாட்டில் திங்கள்கிழமை சந்தித்து பேசிய மெத்வதேவ், இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏதுவும் இல்லை என்றார்.

இருப்பினும், தங்களது கருத்துகள் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா-ரஷியா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பனிப் போர் தற்போதும் எதிரொலித்துள்ளதாகவே இதனை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில், மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுவ திட்டமிடுதல், நேட்டோ அமைப்பில் ஜார்ஜியா, உக்ரைன் ஆகிய நாடுகள் இணைவதற்கு ஆதரவு தெரிவித்து வருவது போன்ற காரணங்களால் புஷ் அரசு மீது ரஷியா கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பிலான உறவில் விரிசல் இருந்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அடுத்து பொறுப்பேற்கவுள்ள அமெரிக்க அதிபருடன், தான் நல்லுறவை பேண விரும்புவதாக மெத்வதேவ் கூறினார்.

முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெüனையும், மெத்வதேவ் சந்தித்துப் பேசினார்.

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்