ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் 27 நாடுகளின் அமைச்சர்களும் கலந்து கொண்ட சம்பிரதாயப்பூர்வமற்றப் பேச்சுகளின் போது குடியேற்ற வாசிகள் மற்றும் அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கான பொதுவான விதிகளை உள்ளடக்கிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ் உடன்படிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுமென பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குடியேற்றவாசிகள் குடியேற விரும்பும் நாடுகளின் மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக் கொள்வது அவசியமென்ற சர்ச்சைக்குரிய விதிகளை பிரான்ஸ் கைவிட்ட பின்னரே சீர்த்திருத்தங்களுக்கு அமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுமார் 8 மில்லியன் சட்ட விரோத குடியேற்றவாசிகள் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

சட்ட விரோத குடியேற்ற வாசிகள் மீதான கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கும் இவ் உடன்படிக்கையின் நோக்கம் சட்ட ரீதியான குடியேற்றவாசிகள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிவகைகளை இலகுவாக்குவதாகும்.

ஐரோப்பாவில் வயதானவர்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் பல துறைகளுக்கு குடியேற்ற தொழிலாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 
  1. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  2. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  3. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  4. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  5. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  6. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  7. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  8. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  9. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  10. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு

கட்டுரைகள்