ஜி8 கூட்டமைப்பில் உலகின் செல்வந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, மற்றும் கனடா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இவ் அமைப்பு அடிக்கடி கூடி உலக நாடுகளின் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

இவ்வருட மாநாடு ஜப்பானின் ஹொக்கெய்டோ தீவில் ஆரம்பமாகியுள்ளது. இதில் இந்தியா, சீனா, பிரேஸில், அவுஸ்திரேலியா மற்றும் தென்கொரியா போன்றவை நட்பு நாடுகள் என்ற அளவில் கலந்துகொண்டுள்ளன.

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆபிரிக்க நாடுகளுக்கு நிதியுதவி, உணவு பிரச்சினை, சிம்பாப்வே நாட்டு விவகாரம், ஆகிய 3 பிரச்சினைகள் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க ஜனாதிபதி புஷ், ஆபிரிக்க நாடுகளுக்கு நிதியுதவி விரைவில் அளிக்கப்பட வேண்டும்.

ஆபிரிக்க சிறுவர்களுக்கு நுளம்பு வலைகளை பணக்கார நாடுகள் வழங்க வேண்டும். நுளம்பு கடிகளால், சிறுவர்கள் தேவையில்லாமல் பலியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும், உலக மக்கள் பட்டினியால் அவதிப்படுவது கவலை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆபிரிக்க மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அதனால் வசதியான நாடுகள், ஆபிரிக்க மக்களுக்கு கூடுதலாக நிதி உதவி அளிக்கவேண்டும் என்றும் புஷ் வலியுறுத்தினார்.

ஜேர்மன் சான்ஸ்லர் அஞ்செலா மார்கல் பேசுகையில்,

சிம்பாப்வே நாட்டு ஜனாதிபதி தேர்தலில் ரொபேர்ட் முகாபே தனி ஒருவராக போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸி பேசுகையில், ஜி8 நாடுகள் அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும், அதில் வல்லரசு நாடுகளாக வளரும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் பிரேசில், தென்னாபிரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளையும் சேர்த்து கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நாடுகளை ஒதுக்கி வைப்பது புத்திசாலித்தனமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்