ஈரான் போன்ற நாடுகளிலிருந்து எழும் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பிலான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காக செக் குடியரசின் தலைநகர் பராக்கின் தென்மேற்குப் பகுதியில் ராடர் கண்காணிப்பு திட்டத்தை நிறுவும் உடன்படிக்கையில் அமெரிக்க மற்றும் செக் குடியரசின் வெளிநாட்டமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா செக் குடியரசிலுள்ள தனது எல்லைக்கருகில் ஏவுகணைப் பாதுகாப்பு கவசம் நிறுவப்படுமானால் தான் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் ரஷ்ய வெளியுறவுத் துறை விடுத்துள்ள அறிக்கையில்;
அமெரிக்கா தந்திரோபாய ரீதியில் எமது எல்லைக்கருகில் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தை அமைக்குமானால் இதற்குப் பதில் நடவடிக்கையாக இராஜதந்திர வழிமுறைகளை தவிர்த்து இராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் நிலைமைக்கு நாம் தள்ளப்படுவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளிக்குமுகமாக கருத்துத் தெரிவித்துள்ள பென்டகன் மொஸ்கோ தனது ஆக்கிரமிப்புத் தனமான பேச்சினால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்குமிடையில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கிடையில் தமது ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் ரஷ்யாவை இலக்காகக் கொண்டதல்ல என்பதை விளக்கும் முயற்சியாக தாம் தொடர்ந்தும் ரஷ்யாவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதேவேளை இத்திட்டத்தை நிறுவுவது தொடர்பில் மொஸ்கோ முன்வைத்த யோசனைகளை அமெரிக்கா அலட்சியம் செய்துள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


