வடகொரியா அணுவாயுதம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட முன்வந்ததை தொடர்ந்து அந்த நாட்டை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து 6 நாடுகள் பங்கு கொள்ளும் பேச்சுவார்த்தை இன்று வியாழக்கிழமை சீனாவில் தொடங்குகிறது.
இதில் வடகொரியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா ஆகிய 6 நாடுகள் பங்கு கொள்கின்றன.
வடகொரியா அணுவாயுதம் தயாரிக்கும் வசதிகள் பற்றிய பட்டியலை அமெரிக்காவிடம் கடந்த மாதம் கையளித்தது.
அணுவாயுதம் தயாரிக்க உதவும் மூலப்பொருட்களை அழிக்கும் பணியில் அது கடந்தாண்டு இறுதியில் ஈடுபட்டது.
இதைத்தொடர்ந்து தான் அதன் பெயரை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
மேலதிக செய்திகள்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்



.jpg)


