SmallMediumLarge NarrowWideFluid
நீண்ட நடுத்தர இலக்குகளை தாக்கும் 9 ஏவுகணைகளை ஈரான் பரிசோதித்தது அச்சிடு E-mail
வியாழன், 10 ஜூலை 2008 06:45

iran.jpgநீண்ட நடுத்தர இலக்குகளை தாக்கியழிக்கும் வீச்சை கொண்ட 9 ஏவுகணைப் பரிசோதனைகளை ஈரான் மேற்கொண்டுள்ளது.

 இவ் ஏவுகணைகளிலொன்று இஸ்ரேலைக் தாக்கக்கூடிய 2000 கிலோமீற்றர் வீச்சைக் கொண்டதாகும்.

சஹாப் 3 ஏவுகணைப் பிரிவின் புதிய அத்தியாயம் என அழைக்கப்படும் இவ் ஏவுகணை பரிசோதனையை ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டம் தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்திருக்கும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரானின் இறைமையை பாதுகாக்க நாம் தயாரென தெரிவித்துள்ள இச் சோதனையை நடத்திய ஈரானிய புரட்சிகரப் காவல் படையின் விமானப் படைத் தளபதி, எமது ஏவுகணைகள் எந்த இலக்கையும் எந்த நேரத்திலும்

விரைவாகவும் சரியாகவும் தாக்குவதற்கு தயாராக உள்ளதெனத் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிரிகளின் இலக்குகள் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதனால் அவர்கள் மீண்டும் அந்த தவறை செய்யமாட்டார்களெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ஈரான் தெளிவான எச்சரிக்கையொன்றை விடுத்திருப்பதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர வளைகுடாப் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் உலக சந்தையில் எண்ணெய் விலையை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகின்றது

ஈரானின் அணுவாயுத இலக்குகளை தாக்குவதற்கான ஒத்திகையில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கான பதிலடியாகவே இது கருதப்படுகிறது.

ஈரான் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை நிறுத்த மறுத்ததையடுத்து ஈரானிய அதிகாரிகள் மீது அமெரிக்க திறைசேரி புதிய தடைகளை அறிவித்ததைத் தொடர்ந்தே இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.