| டாக்டர் ஹனீஃப் கைது விவகாரம்: ஆஸ்திரேலிய போலீசாருக்கு மீண்டும் சிக்கல் |
|
|
| வெள்ளி, 11 ஜூலை 2008 02:07 |
|
குண்டுவெடிப்பு வழக்கில் ஹனீஃபுக்கு தொடர்பு இருப்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று மீண்டும் மீண்டும் கூறியும், ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீசார் வேண்டுமென்றே அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்ததாக, விசாரணைக் கமிஷன் முன் குயீன்ஸ்லாண்ட் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகாததால், விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் இந்தியா திரும்பிய ஹனீஃப், தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக ஆஸ்திரேலிய போலீசார் மீது வழக்குத் தொடர்ந்தார். இதற்கிடையே ஹனீஃப் கைது செய்யப்பட்ட விதம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்த ஜான் கிளார்க் விசாரணைக் கமிஷன், தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், ஹனீஃப் மீது போதிய ஆதாரம் இல்லை என்று குயீன்ஸ்லாண்ட் போலீசார் பலமுறை எச்சரித்துள்ளனர். ஹனீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள், போதிய ஆதாரம் இல்லை என்று நான்கு அல்லது ஐந்து முறை எடுத்துக்கூறியும் ஃபெடரல் போலீசார் அவர் மீது குற்றம் சுமத்தி கைது செய்துள்ளனர். அவர் மீது வேண்டுமென்றே தீவிரவாதம் தொடர்புடைய புகாரை பதிவு செய்து, மூன்று வாரம் சிறையில் அடைத்தனர் என்று விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








லண்டனில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய டாக்டர் முகமது ஹனீஃபை கைது செய்த ஆஸ்திரேலிய போலீசாருக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.