சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபேத்திய மக்கள் தங்களுக்கு தன்னாட்சி வழங்கக்கோரி கடந்த மார்ச் மாதம் 14 ம் தேதி திபத்திய தலைநகர் லாசாவில் திபேத்தியர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது சீன போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் திடீர் என்று வன்முறையில் இறங்கினர்.
தீ வைப்பு, கொள்ளை, பொது அமைதிக்கு குந்தகம், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் போன்ற குற்றங்களுக்காக திபேத்திய போராட்டக்காரர்கள் பலரை சீன ராணுவம் கைது செய்தது. இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவர்களில் 41 பேர் குற்றவாளிகள் என்று கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 30 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 19 மற்றும் 20 தேதிககளில் 19 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தற்போது மேலும் 42 பேருக்கு சிறை தண்டனைகளை வழங்கி சீன ஞிதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களில் இன்னும் 16 பேருக்கு தண்டனை என்ன என்பது தெரியவில்லை.இந்த 16 பேரில் சிலருக்கு மரண தண்டனை கூட கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தகவல்களை சீன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சீன ராணுவம் கட்டுப்பாட்டுடன் தான் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ஆனால் போராட்டக்காரர்கள்தான் அத்து மீறி வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் சீன கூறி வருகிறது.
திபேத்தியர்களின் இந்த வன்முறைக்கு திபேத் தலைவர் தலாய் லாமாவே காரணம் என்றும் சீன தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
மேலதிக செய்திகள்
- 'முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்'
- பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மீது துப்பாக்கிச் சூடு-தீவிரவாத தாக்குதல் அல்ல
- பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் -பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்
- பிஜி தீவை கடும் புயல் தாக்கியது-அவசரநிலை அமல்
- நிபுணர்கள்குழுஅமைப்பு : பான்கீ மூன் ,நவநீதம்பிள்ளை பேச்சுவார்த்தை
- சாவகச்சேரியில் வர்த்தகரின் மகன் கடத்தல்
- பழம்பெரும் பிரபுக்கள் சபையை ஒழிக்கிறது இங்கிலாந்து
- பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
- ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது



.jpg)


