பாலஸ்தீன அரசு செய்தி நிறுவனமான "வாஃபா' இத்தகவலை தெரிவித்துள்ளது. ஜெருசலேமில் தங்கியுள்ள பாலஸ்தீனர்களை விரட்ட இஸ்ரேல் தற்போது எலிகளையும் ஆயுதமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளது.
கடந்த 2 மாதங்களாக ஜெருசலேம் வரும் யூதர்கள் பெரிய இரும்புக் கூண்டுகளில் ஏராளமான எலிகளை கொண்டு வந்து பாலஸ்தீனர்கள் வசிக்கும் தெருக்களில் அவற்றை திறந்து விட்டுச் செல்கின்றனர்.
அவை அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இங்குள்ள பாலஸ்தீனர்களுக்கு பல விதங்களிலும் தொல்லை கொடுத்து அவர்களை வீட்டை விட்டும் நகரத்தை விட்டும் விரட்டுவதுதான் இஸ்ரேலிய அதிகாரிகளின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஜெருசலேமில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் இது குறித்து கூறும் போது, "எலிகளை அழிக்க விஷ மருந்துகளை பயன்படுத்தலாம் என்ற போதிலும் அவை கிடைப்பது இல்லை' என்றனர்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜெருசலேம் நகராட்சி செய்தித் தொடர்பாளர், "இது ஒரு கட்டுக்கதை. நகருக்குள் எலிகளை விடுவதாகக் கூறுவதில் உண்மை இல்லை' என்று கூறியுள்ளார்.
மேலதிக செய்திகள்
- பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
- ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்



.jpg)


