இத்திட்டத்துக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு இரண்டு பக்க அறிவிப்பு கடிதத்தை அரசு அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் உள்ள தலிபான் மற்றும் அல்-காய்தா தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுக்கு பல்வேறு வகையில் அமெரிக்கா உதவிவருகிறது.

இதில் தீவிரவாதிகளின் பதுங்கிடங்களை துல்லியமாக கணித்து தாக்குதல் நடத்திட பாகிஸ்தான் வசம் தற்போதுள்ள எஃப்-16 ரக போர் விமானங்கள் திறனற்றவையாக உள்ளன. எனவே அவற்றின் மின்னணு மற்றும் ரேடார் திட்டங்களை நவீனப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.

ஏற்கெனவே தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து சுமார் ரூ.966 கோடியை போர் விமானங்களை நவீனப்படுத்தவதற்காக திருப்பிவிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஒப்புதலைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது.

ஆனால் பாகிஸ்தான் தனது எதிரியான இந்தியா மீது தாக்குதலைத் நடத்துவதற்கு நவீன எஃப்-16 ரக விமானங்களைப் பயன்படுத்தும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்