ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளும் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலும் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக யூசுப் ரஸா கிலானியின் வொஷிங்டனுக்கான விஜயம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவதாக நிருபர்களுக்கு தெரிவித்துள்ள கிலானி, மார்ச் மாதத்தில் பிரதம மந்திரியாக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து இதுவே அமெரிக்காவுக்கான முதல் பயணம் எனவும் கூறினார்.
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் மீது இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிரான நடவக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கிலானி மற்றும் புஷ் கலந்துரையாடவுள்ளனர்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஆளுங்கூட்டணியின் கூட்டத்தின் போது பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை அனுமதிப்பதில்லையென்பதுடன் வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக்கொள்வதில்லையெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அணுசக்தி ஒப்பந்தம், தெற்காசியாவில் அணு ஆயுதப் பரவலுக்கு வழி வகுக்குமெனவும், எனவே இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதியளிக்கக் கூடாதெனவும் கூறி சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்திற்கு பாகிஸ்தான் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
இந்தக் கடிததத்தில்; இந்த ஒப்பந்தம் இந்தியாவை அணுவாயுத சக்தியாக அங்கீகரிக்க வழி செய்கிறதெனவும், மேலும் பல அணுவாயுத சோதனைகளை இந்தியா நடத்துவதற்கும் வழி வகுக்கும் வகையிலுள்ளதெனவும் அந்தக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தெற்காசியாவில் அணு ஆயுதப் பரவலும், அணு ஆயுதப் போட்டியும் உருவாகுமென்பதுடன் இப்பிராந்தியத்தில் அமைதி கெடுமெனவும் அந்தக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


