SmallMediumLarge NarrowWideFluid
உக்ரெய்னில் வெள்ளப்பெருக்கு; 13 பேர் பலி அச்சிடு E-mail
ஞாயிறு, 27 ஜூலை 2008 09:55
உக்ரெய்னில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் காற்றினால் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக உக்ரெய்னின் அனர்த்த நிவாரண அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 சிறுவர்களும் அடங்குவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 
உக்ரெய்னின் மேற்குப் பிராந்தியத்தில் தொடர்ந்து  4 தினங்களாக நிலவி வருகின்ற வெள்ளப்பெருக்கு மற்றும் புயல்க்காற்றினால் 20,000 பாதிக்கப்பட்டுள்ளதுடன் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அனர்த்த நிவாரண அமைச்சு, 8,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளமட்டம் உயர்வடைந்துள்ளதால் ஆயிரம் பேர் ஆபத்தான நிலையிலிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 100 வருடங்களில் உக்ரெய்னில் இதனைப் போன்ற சம்பவங்கள் எதனையும் கண்டதில்லையென உக்ரெய்ன் பிரதிப் பிரதம மந்திரி கூறியதாக இன்ரர்பக்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை உக்ரெயின் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.