மியான்மரில் செயல்படும் ஐ.நா. உலக உணவு திட்டத்தின் இயக்குநர் கிரிஸ் கேய் இதைத் தெரிவித்தார். மியான்மரில் நிவாரணப் பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் நிவாரண உதவி தேவைப்படுகிறது. அவர்களுக்கு உணவு தேவைப்படுகிறது.

மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர், இந்தப் புயலின்போது உணவுக் கையிருப்பை இழந்து விட்டனர். மியான்மர் அரசும், ஐ.நா. அமைப்பும் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்தது.

கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு, விவசாயம் ஆகியவற்றை சீரமைக்க வேண்டியுள்ளது. ஆய்வு மேற்கொண்டபோது, 34 சதவீத மக்களுக்கு சாப்பிட உணவில்லை என்று தெரியவந்தது. உணவுக்காகவே அதிகம் செலவிட வேண்டியிருப்பதாக 89 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

அந்நாட்டில் 9,24,000 பேருக்கு ஐ.நா. உணவுத் திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட எரவாடி பகுதியில் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது.

அந்நாட்டில் 7 லட்சம் சிறுவர்களுக்கு பல்வேறு விதமான நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன. அந்த சிறுவர்கள் வீடுகளை இழந்து வாடுகின்றனர். அவர்கள் படித்த பள்ளிக்கூடம் இடிந்துவிட்டது. மருத்துவமனைகள் அழிந்துவிட்டன.

சேதமான பள்ளிகளை ஐ.நா. அமைப்பான யுனிசெப், சீரமைத்து வருகிறது. 6000 சிறுவர்கள் படிக்க வசதியாக சில பள்ளிகள் யுனிசெப் உதவியால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்