| ஆப்கானிஸ்தானில் போர் விமான தாக்குதலில் 70 தலீபான்கள் பலி |
|
|
| திங்கள், 28 ஜூலை 2008 00:57 |
|
மாவட்ட தலைமையகம் மீது தாக்குதல் ஆப்கானிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் எல்லையோரத்தில் உள்ளது கோஸ்ட் மாநிலம். இந்த மாநிலத்தில் உள்ள ஸ்பெரா மாவட்ட தலைமையகத்தை தலீபான் தீவிரவாதிகள் நேற்று அதிகாலை தாக்கினார்கள். இதில் 2 போலீஸ்காரர்கள் பலியானார்கள். இதில் கட்டிடமும் சேதம் அடைந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நேட்டோ ராணுவத்தின் உதவியை கோரியது. அமெரிக்க ராணுவ கூட்டுறவில் உள்ள நாடுகளின் ராணுவம் தான் நேட்டோ ஆகும். 70 தீவிரவாதிகள் பலி இந்த நேட்டோ ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் 70-க்கும் மேற்பட்ட தலீபான் தீவிரவாதிகள் பலியானார்கள். இந்த தகவலை மாநில கவர்னர் அர்சலா ஜமால் தெரிவித்தார். ஆனால் இந்த தகவலை தலீபான் தீவிரவாதிகள் மறுத்து உள்ளனர். எங்கள் தரப்பில் யாரும் பலியாகவில்லை. நாங்கள் நடத்திய தாக்குதலில் தான் 8 போலீஸ்காரர்கள் பலியாகி உள்ளனர் என்று அவர்கள் கூறினர். வீடியோ ஆதாரம் தலீபான் தரப்பில் யாரும் பலியாகவில்லை என்று தீவிரவாதிகள் கூறி இருப்பதற்கு கவர்னர் மறுத்து இருக்கிறார். ஸ்பெரா மாவட்டத்தில் நடந்த வான் தாக்குதலில் 50 முதல் 70 தீவிரவாதிகள் பலியானதற்கு என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. இதை நான் அதிகாரப்பூர்வமாகத்தான் கூறுகிறேன் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், வான் தாக்குதல் தொடங்கியதும் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பித்து ஓடி, கிராமங்களுக்குள் புகுந்தனர். கிராமங்களில் அப்பாவிகள் பலியாவதை தடுப்பதற்காக வான் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
|
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








ஆப்கானிஸ்தான் நாட்டில் நேட்டோ ராணுவத்தின் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 70 தலீபான் தீவிரவாதிகள் பலியானார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.