பாகிஸ்தானின் சுவிட்சர்லாந்து

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு பாகிஸ்தானின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு அழகும், அமைதியும் நிறைந்த பிரதேசம் இது. இந்த பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தஞ்சம்புகுந்ததும், அங்கு இருந்த அமைதி கெட்டது.

தீவிரவாதிகள் சோதனைச்சாவடிகள் மீது தாக்குதல் நடத்துவது, ராணுவவீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது என ஈடுபட்டு அமைதியை குலைத்தனர். இதனால் அவர்களை வேட்டையாடுவதற்காக ராணுவம் அந்த பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.

போர் நிறுத்த ஒப்பந்தம்

தீவிரவாதிகள் தரப்பில் உயிர்ச்சேதம் அதிகம் இருந்தது. இதனால் தீவிரவாதிகள் ராணுவத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். கடந்த 3 மாதம் மட்டுமே இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த நிலையில் தான் தீவிரவாதிகள் அமைதி ஒப்பந்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பெண்கள் பள்ளிக்கூடத்தில் படிப்பதை தடுப்பதற்காக 10-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களை தாக்கி அழித்தனர். ஒரு ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் தீவிரவாதிகள் நடவடிக்கையில் 137 பள்ளிக்கூடங்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. ராணுவத்தினரின் மீது தாக்குதல் நடத்தினார்.

94 பேர் பலி

இதனால் ராணுவம் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டது. கடந்த 5 நாட்களாக ராணுவ நடவடிக்கை இருந்தது. அப்போது தீவிரவாதிகள் ராணுவத்தினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 14 ராணுவ வீரர்கள் பலியானார்கள். கிட்டத்தட்ட 94 ராணுவ வீரர்கள் ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.

ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நடந்ததாக பிரிகேடியர் ஜியா போட்லா தெரிவித்தார். தீவிரவாதிகள் ஒரு சில பகுதிகளுக்குள் மட்டும் முடக்கப்பட்டு உள்ளனர்.

 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்