SmallMediumLarge NarrowWideFluid
ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு அச்சிடு E-mail
புதன், 06 ஆகஸ்ட் 2008 15:21
musharraf_Tamb.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. 
 

ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் மீது அதிகார துஷ்பிரயோகத் தீர்மானம் கொண்டு வருவதற்குப் பதிலாக இவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபை ஜனாதிபதி பதவியிலிருந்து கௌரவமான முறையில் வெளியேற்றுவதுடன், நவாஷ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியுடனான கூட்டணியையும் பலப்படுத்திக் கொள்ள முடியுமென பாகிஸ்தான் மக்கள் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவலகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கடந்த வருடம் முஷராபினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை  புதிய ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு உதவுமென குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபை பதவி நீக்கம் செய்வது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆசிப் அலி சர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் நவாஸ் ஷெரீப்பும் நேற்றுமுன்தினம்  திங்கட்கிழமை பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகளை மறுநியமனம் செய்வது உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் இவர்கள் விவாதித்துள்ளனர்.

இந்த சந்திப்பு இஸ்லாமாபாத்தில் உள்ள சர்தாரியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

 

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.