இதற்கு முன்னர் ரஷ்ய ஆதரவைப் பெற்ற தெற்கு அசட்டியா பிராந்தியத்தின் தலைநகரை தமது படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ஜோர்ஜிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
 
தலைநகர் ஸ்கின்வலியில் இரவு வேளையில் குண்டுவீச்சுக்களுடன் ஜோர்ஜியாவின்  இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியிருந்ததுடன் இராணுவ நடவடிக்கைகளுக்கு  ஆதரவாக பீரங்கிகள், தாங்கிகள் மற்றும் விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தலைநகர் ஸ்கின்வலி மீது மேற்கொள்ளப்பட்ட ஜோர்ஜியர்களின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெற்கு அசட்டியாவின் பிரிவினைவாதத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அமைதிகாப்பு படைகளுடன் அந்தப் பிராந்தியத்திலிருந்த தமது  இராணுவத்தினர் 10 பேர் இதன்போது கொல்லப்பட்டதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பதில் தாக்குதல்களுக்கான படைகளை அசட்டியாவுக்கு தாம் அனுப்பியுள்ளதாக மொஸ்கோவிலுள்ள பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

மேலும் ரஷ்யாவின் 58 ஆவது படைப்பிரிவு தலைநகர் ஸ்கின்வலியை அண்மித்துவிட்டதாக மூத்த தளபதி ஒருவரை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தெற்கு அசட்டியாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மோதல்கள் முழு அளவிலான யுத்தமாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

இவ்வாறு யுத்தம் இடம்பெறுமானால் அது மொத்தப் பிராந்தியத்துக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமென ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பின் தலைவரான பின்லாந்து வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஸ்டப் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதைய பதற்றநிலை குறித்து மிகுந்த கவலையும் கரிசனையும் கொண்டுள்ளதாக நேட்டோ கூட்டணி நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புமே விவேகத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டுமென ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மைக்கெல் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்