ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இருநாட்டுத் தலைவர்களும் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

அப்போது பாகிஸ்தான் வருமாறு மன்மோகன் சிங்குக்கு அதிபர் ஜர்தாரி அழைப்பு விடுத்தார். அதேபோல், இந்தியா வருமாறு ஜர்தாரியிடம், மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.

தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவது என இரு தலைவர்களும் கூட்டாக அறிவித்தனர். இது தொடர்பாக அடுத்த மாதம் சிறப்பு மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இவைத் தவிர அக்டோபர் 21-ம் தேதி முதல் காஷ்மீர் எல்லை வழியாக வர்த்தக போக்குவரத்தை துவங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த தகவல்களை இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் வாஷிங்டனில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்