உலகப் பொருளாதாரம் மேலும் சரிவுகளை எதிர்நோக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஆசிய சந்தையில் மசகுஎண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒருவருடத்துக்கு முன்னர் இருந்த விலைக்கு சமமான அளவு மசகுஎண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
88.78 அமெரிக்க டொராக விநியோகிக்கப்படும் மசகு எண்ணெயின் விலை திடீரென 6.07 அமெரிக்க டொலரால் வீழ்ச்சிகண்டுள்ளது.
சிங்கப்பூர் சந்தையில் கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை குறைவாகக் காணப்பட்டபோதும் அதன் பின்னர் சடுதியாக அதிகரித்திருந்தது.
கடந்த ஜுலை மாதம் 147.27 அமெரிக்க டொலரை எட்டியிருந்த ஒரு பரல் மசகு எண்ணெயின் விலை தற்பொழுது 40 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை 93.02 அமெரிக்க டொலராக இருந்த மசகு எண்ணெய், ஈரானின் மேற்குப் பகுதி வான் எல்லைக்குள் தற்செயலாக நுழைந்த விமானமொன்றை ஈரான் வலுக்கட்டாயமாகக் கீழ் இறக்கியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து மசகு எண்ணெயின் விலை 5 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்தது.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


