SmallMediumLarge NarrowWideFluid
பிரபல பாடகி மாதங்கி அருள்பிரகாசம் (M:I:A) கர்ப்பம் அச்சிடு E-mail
புதன், 15 ஒக்டோபர் 2008 15:12

mia-30.jpgஈழத்தமிழரான பிரிட்டனில் வசிக்கும் உலகின் பிரபலமான ஆங்கில பாடகியான M:I:A என்ற பெயரில் மேற்கத்தைய இசை ரசிகர்களால் அறியப்பட்ட மாதங்கி அருள்பிரகாசம் தற்போது கருவுற்றுள்ளார் என்று மேற்குலக பத்திரிகைச்செய்திகள் தெரிவிக்கின்றன.

31 வயதான மாதங்கி நியூயோர்க் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின்  தான் கருவுற்றிருப்பதை ரசிகர்கள் முன்னிலையில் உறுதி செய்தார். தனக்கு இரட்டை குழந்தைகள் கிடைக்கும் என்று தான் நம்புவதாக மாதங்கி அருள்பிரகாசம் தெரிவித்தார்.

பல பிரபலமான அல்பங்களை உருவாக்கி மேற்குலகில் இசை ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மாதங்கி அருள்பிரகாசம் ஈரோஸ் ஈழப்போராட்ட இயக்கமான ஈரோஸ் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான அருளர் அவர்களின் மகளாவார்.

 

 

உச்சத்ஸ்தாயில் அமைந்த பாடல்களை மிகவும் திறமையாக பாடியுள்ள இவர தனது தந்தை பெயரில் அருளர் என்ற அல்பத்தையும் தாய் பெயரில் கலா என்ற அல்பத்தையும் உருவாக்கியுள்ளதுடன் மேலும் பல பிரபல்யமான அல்பங்களை உருவாக்கியுள்ளார்.

இவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக அண்மையில் சிங்கள பாடகர் ஒருவரால் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நியூயோர்க்கில் தங்கியுள்ள இவர் மேலும் பல பிரபல்யமான அல்பங்களை உருவாக்கி எதிர்காலத்தில் இசை ரசிகர்களில் பாராட்டுகளை பெறுவார் என எதிர்பார்க்கபடுகிறது.  

மாதங்கி குறித்து உலக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்

http://newyorker.com/critics/music/?041122crmu_music
http://www.japantimes.com/cgi-bin/getarticle.pl5?fm20050116a2.htm
http://www.pitchforkmedia.com/top/2004/singles/index5.shtml
http://www.dustedmagazine.com/features/324
http://www.230publicity.com/mia.html

http://www.google.de/search?hl=de&q=Maya

 

mia-7a.jpg

 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.