செப்டம்பர் 11, 2001-ம் ஆண்டு விமானம் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. அத்துடன் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ கேந்திரமான பென்டகனும் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளானது.

இதைத்தொடர்ந்து அனைத்து அமெரிக்க விமானங்களிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்தன. பயணிகள் காலணிகள் முதல் அனைத்தும் பரிசோதிக்கப்படுகின்றன. ஷேவிங் கிரீம், பற்பசை உள்ளிட்ட ஜெல் பொருள்கள் அனைத்தும் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரில் பேக் செய்யப்பட வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஜெல் பொருள்கள் பயணிகளின் பேக்கேஜில் மிகக் குறைந்த அளவே எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும், பயணிகளை வழியனுப்ப வரும் பகுதிகள் வரை தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியுடன் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. இது மற்ற பயணிகளிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பயணிகள் அதிகம் செல்லும் 20 விமான நிலையங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ததில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

பிலடெல்பியா, டெட்ராய்ட், ஃபோனிக்ஸ், மினியாபோலிஸ், செயின்ட் பால், டல்லாஸ் போர்ட் வொர்த், லாஸ் ஏஞ்சலீஸ் ஆகிய 7 விமான நிலையங்களில் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பகுதி வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இது முற்றிலும் பாதுகாப்பு குறைபாட்டின் வெளிப்பாடு என தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்விதம் அனுமதிப்பது பயணிகளுக்கும், விமான நிலைய ஊழியர்களுக்கும் எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிகளை அனுமதிப்பதானது, வாய்ப்பு கிடைத்தால் அதை விமானத்திற்குள் எடுத்துச் செல்ல வழி ஏற்படுத்தித் தருவது போலாகிவிடும். விமான நிலையங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், விமானங்களின் பயணம் பத்திரமானதாக இருக்காது என்று இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ரஃபி ரோன் தெரிவித்துள்ளார். தற்போது விமான நிலைய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் ரஃபி, விமான நிலைய பாதுகாப்பு மற்றும் விமான பயணத்தையும் வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அப்பாற்பட்ட பகுதிகள் அனைத்தும் பொதுவான பகுதிகளாகத்தான் கருதப்படுகிறது. எனவே அதுவரை துப்பாக்கிகள் எடுத்துவருவதை தடுக்க முடியாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

பயணிகளை வழியனுப்ப வரும் பகுதி வரை, அது பொதுவான இடம்தான். ரயில்வே நிலையம் மற்றும் விற்பனை அங்காடி போன்றதுதான் என்று பிலடெல்பியா போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஃபெடரல் சட்டப்படி அனைத்து இடங்களுக்கும் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி உள்ளது. இருப்பினும் விமான நிலையங்களில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்தான் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஃபெடரல் பாதுகாப்பு நிர்வாக செய்தித் தொடர்பாளர் ஜான் ஆலன் கூறினார்.

 
  1. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  2. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  3. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  4. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  5. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  6. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  7. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  8. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  9. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  10. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி

கட்டுரைகள்