மலேசிய மக்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையில் இந்து உரிமைக் குழு செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுஅமைதி பாதிக்கப்படுகிறது.
மலாய் மக்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் இடையில் மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்படுவதாக சையது ஹமீத் அல்பர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்து உரிமைக் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தங்கள் அமைப்பை தடை செய்தது குறித்து இந்து உரிமைக் குழுத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் மலேசிய அரசு செயல்படுவதாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாணேந்திரன் தெரிவித்தார்.
தடை விதித்தாலும் தங்களின் போராட்டங்கள் தொடரும் என்று இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயலாளர் குணராஜ் ஜார்ஜ் கூறினார்.
இந்து உரிமைக் குழுத் தலைவர் வைத்தியமூர்த்தி தற்போது லண்டனில் உள்ளார். இந்த விவகாரத்தில் பொறுமை காக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


